JobVibe.lk - Sri Lanka Job Portal

தைபா அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவிகளை சேர்ப்பதற்கான நேர்முகப் பரீட்சை.!

(ஏயெஸ் மெளலானா)

சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவிகளை சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 17ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களிலும் முற்பகல் 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 1.00 வரை சாய்ந்தமருது, பொலிவேரியனில் அமைந்துள்ள கல்லூரியின் அதிபர் காரியாலயத்தில் இடம்பெறவுள்ளது.


ஜீ.சி.ஈ.சாதாரண தரப் பரீட்சை எழுதிய, அல்-குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்த, ஆர்வமுள்ள மாணவிகள் நேர்முகப் பரீட்சையில் பங்குபற்ற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 2012ஆம் ஆண்டு தொடக்கம் இயங்கி வருகின்ற சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரியில் மௌலவியா பட்டத்திற்கான அல்ஆலிம் இஸ்லாமிய கற்கை நெறியுடன் ஜீ.சி.ஈ. உயர் தரப் பரீட்சைக்கும் மாணவிகள் தயார்படுத்தப்படுகின்றனர் என்று

கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி தெரிவித்தார்.


இதுவரை 39 மாணவிகள் இக்கல்லூரியில் இருந்து மௌலவியா பட்டம் பெற்றுள்ளனர். இவர்களுள் பல மாணவிகள் பல்கலைக்கழக அனுமதி பெற்று, உயர் கல்வி கற்று வருவதுடன் கற்கைகளை பூர்த்தி செய்த சிலர் பல்கலை பட்டம் பெற்று வெளியேறியுமுள்ளனர் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال