JobVibe.lk - Sri Lanka Job Portal

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் வாய்ச்சுகாதாரப்பிரிவு ஆரம்பித்து வைப்பு

நூருல் ஹுதா உமர்

கடந்த காலங்களில் தென்கிழக்கு  பல்கலைக்கழகம் மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை இணைந்து பல்வேறு செயறிட்டங்கள் கருத்திட்டங்களை அமுல்படுத்தி வருகின்றன. இதற்கமைவாக கடந்த ஆறு மாத காலமாக பேசப்பட்டு  பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வாய்ச் சுகாதார பிரிவினால் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் வாய் சுகாதார மேம்பாட்டுப்பிரிவு இன்று (17) திறந்து வைக்கப்பட்டதுடன் எதிர்காலத்தில் பணிமனையின் பிரிவுகளினால் மாணவர்கள் மற்றும் கல்விச்சமூகத்திற்கான விசேட செயற்றிட்டங்களை மேற்கொள்வதென்ற இருதரப்பு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.

 

குறித்த நிகழ்வில் பணிமனை சார்பில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ எல்.எம். றிபாஸ், பிரதி பணிப்பாளர் எம்.பீ.ஏ வாஜித், திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.சீ.எம் மாஹிர், கல்முனை பிராந்திய வாய்ச்சுகாதார நிபுணர் எம்.எச்.எம் சரூக் அவர்களும் ஏனைய பிரிவுத்தலைவர்களும் தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தின் சார்பில் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர், பதில் பதிவாளர் மற்றும் பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் மாணவர் பேரவையின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் நிதி நிலைமையைக் கருத்திற்கொண்டு பயன்படுத்தாமல் இருந்த 5 மில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை பெரும் சிரமத்திற்கு மத்தியில் திருத்தி மீளமைத்து குறித்த வாய்ச்சுகாதாரப்பிரிவினை ஆரம்பித்ததன் மூலம் மாணவர்கள் தேவையற்ற விடுமுறைகளை எடுத்து வெளியில் சென்று மருத்துவங்களை பெறுவது தவிர்க்கப்பட்டிருப்பதுடன் பயணச் செலவுகள் தவிர்க்கப்பட்டுள்ளது









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال