JobVibe.lk - Sri Lanka Job Portal

75 ஆவது சுதந்திர தின விழா பு/சமீரகம முஸ்லிம் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பு/ சமீரகம முஸ்லிம் வித்தியாலயம் மற்றும் சமீரகம இர்பானியா பாலர் பாடசாலை இணைந்து விழா ஏற்பாடு செய்திருந்தனர்.


சமீரகம முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபர் அஷ்ஷேய்க் எம்.எம்.எம். மிஹ்லார் (நளீமி) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், இர்பானியா பாலர் பாடசாலை  மாணவார்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


இதன்போது பாடசாலை அதிபரினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, மாணவர்களால் தேசிய கீதம் இசைக்கப்பட்டதோடு பாடசாலை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வும் இடம்பெற்றது.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال