JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா நல்லடக்கம் பற்றிய அறிவித்தல்

மதுரங்குளி - விருதோடையை சேர்ந்த முத்து மரைக்கார் முன்னாள் ஆசிரியர் (முத்துமாஸ்டர்) அவர்களின் அன்பு மனைவி ஹுஸைமா உம்மா அவர்கள் காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்


அன்னார் மர்லின் மரைக்கார் (சிரேஷ்ட ஊடகவியலாளர் தினகரன் பத்திரிகை), மக்கீன் மரைக்கார், ரிஸானா, ஸப்ரினா ஆகியோரின் அன்பு தாயாரும், வதூத், அஸ்கர் ஆகியோரின் மாமியும் ஆவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம்  இன்று (24) காலை 10.00 மணிக்கு விருதோடை பள்ளி மையயவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த அத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


நீங்களும் உங்களது பிரார்த்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.


اللَّهُمَّ اغْفِرْ لَها ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْه ، وَأَكرِمْ نزُلَه ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ.



Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال