JobVibe.lk - Sri Lanka Job Portal

ஏறாவூரிலுள்ள நஸீர் அஹமட்டின் காரியாலயம் தீயிட்டு கொளுத்தப்பட்டது!

நூருல் ஹுதா உமர்

ஏறாவூரிலுள்ள முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பொறியியலாளர் அல்ஹாபிழ் நஸீர் அஹமட்டின் காரியாலயம் (செவ்வாய்கிழமை) மக்களால் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று முன்தினம் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களால் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.


இதனையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் முன்னாள் பிரதமர் மற்றும் அவரது ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஆதரவாளர்கள் மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் பொதுமக்கள் அவர்களது வாகனங்கள், வீடுகள் உள்ளிட்ட சொத்துக்களை அழித்து பதிலடி கொடுத்து வருகின்றனர் அதன் தொடர்ச்சியாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.










Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال