JobVibe.lk - Sri Lanka Job Portal

நாட்டின் நிம்மதி, சமாதானம், நல்லிணக்கத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்;-முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

நாடு எதிர்பார்க்கின்ற நிம்மதி, சமாதானம், நல்லிணக்கத்தை அடைந்து கொள்ளவதற்கு முஸ்லிம்களாகிய நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் மெற்றோ பொலிட்டன் கல்லாரியின் தவிசாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் விடுத்துள்ள ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


தனது வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;


ரமழான் மாதம் முழுவதும் பசித்திருந்து, விழித்திருந்து, நல்லமல்கள் பல புரிந்து இன்று நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் இந்த மகிழ்ச்சிகரமான நன்நாளில் நமழான் கற்றுத்தந்த பாடங்களை நமது வாழ்நாளில் தொடர்ந்து கடை பிடித்து நடப்பதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிராத்திப்போமாக. பிற மனிதர்களின் பசியை, பட்டினியை, துயரைப் புரிந்து கொள்கின்ற வாய்ப்பை வழங்கும் ஒரு மாபெரும் ஔடதமாக நோன்பு விழங்குகின்றது. நோன்பு நோற்பதன் மூலமாக இனிய குனம், உளத்தூய்மை ஏழைகளின் துயரை உணரும் தன்மை மனித நேயம் போன்ற பல்வேறு நற்பன்புகளை ஒரு மனிதன் அடைந்து கொள்கின்றான்.


மேலும், எமது நாடு இன்று பாரியதொரு பொருளாதார பின்னடைவை எதிர்கொண்டுள்ளது. இதன் காரணமாக நாளுக்கு நாள் பொருட்களின் விலைகள் உயர்வடைந்து செல்வதனால் மக்கள் சொல்லனா துயரத்தை எதிர்கொண்டு வருகின்றனர். ஆகவே இந்த நிலமை மிக விரைவில் நீங்க இந்நன்நாளில் இறைவனிடம் இருகரமேந்தி பிராத்திப்போமாக. அத்துடன் முஸ்லிம்களாகிய நாம் பிற மத சகோதர இன மக்களுக்கு முன்மாதிரியாக திகழ்வதற்கும் திடசங்கற்பம் பூணுவோம்.


புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் எனது பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன். ஈத்முபாரக்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال