JobVibe.lk - Sri Lanka Job Portal

அம்பாறையில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம்-வீதியில் இறங்கிய சிறுவர் இளைஞர்கள்

 பாறுக் ஷிஹான்

நாட்டின் பொருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்துள்ளதை அடுத்து அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி மற்றம் பிரதமர் ஆகியோருக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இதன் தொடர்ச்சியாக  அம்பாறை மாவட்டத்தின்  மருதமுனை, கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை ,அட்டாளைச்சேனை  பகுதிகளில்  போராட்டங்கள் பல்வேறு தரப்பினரால் செவ்வாய்க்கிழமை(5) இரவு முன்னெடுக்கப்பட்டிருந்தன.  



மேலும் வீதிகளில்   பேரணியாகச் சென்ற போராட்டகாரர்கள் கோஷங்கள் எழுப்பியவாறு தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.


இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள்  அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியில் பொலிசார் இராணுவத்தினர்  பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருப்பதைக் காண முடிந்தது  அத்துடன் இவ்வெதிர்ப்பு பேரணி காரணமாக   பிரதான வீதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



பிரதான வீதிகளில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நிறைய இளைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு GO HOME GOTA, வீட்டுக்கும் கேடு நாட்டுக்கும் கேடு கோட்டா நீ அமெரிக்காவுக்கே ஓடு, ஆட்சி செய்து கிழித்தது போதும், குடும்ப ஆட்சி வேரோடு ஒழிக, பெற்றோல் இல்லை டீசல் இல்லை கோட்டாவுக்கு அறிவும் இல்லை, கோட்டா சேர் தயவு செய்து போங்க சேர், வெந்தது நாடு கோட்டாவ தூக்கி வெளியில் போடு, பொருளாதார நெருக்கடி இரவெல்லாம் கொசுக்கடி, பசிலே வெளியேறு போன்ற கோசங்களையிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال