JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் - புளிச்சிக்குளம் கமாலின் மறைவுக்கு மு.கா.தலைவர் அனுதாபம்

புத்தளம், புளிச்சாக்குளத்தைச் சேர்ந்த கமால் என அழைக்கப்படும் காதர் மொஹிதீன் நேற்று (29) மரணித்த செய்தி கேட்டு மிகவும் கவலையடைந்தேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.


கமாலின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது;


1988 ஆம் ஆண்டு நடைபெற்ற வடமேல் மாகாண சபை தேர்தலிலும், 1991  ஆம் ஆண்டு ஆராய்சிக்கட்டு பிரதேச சபை தேர்தலிலும் வேட்பாளராக களமிறங்கினார். புளிச்சாக்குளம் பிரதேசத்தில் பல்வேறு வகையான சமூக விடயங்களில் முன்னின்று தன்னாலான அனைத்து சேவைகளையும் அவர் செய்துவந்தார்.

 

ஆரம்ப காலத்திலிருந்தே கட்சிப் பணிகளை முன்கொண்டு செல்வதில் அவரின் பங்களிப்பு அளப்பரியது. அவர் கட்சிக்கும் தலைமைக்கும் என்றும் விசுவாசமான போராளியாக தனது இறுதி மூச்சுவரை இருந்துவந்தார்.

 

அவர் சிறிதுகாலம் சுகயீனமுற்றிருந்த நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நேற்று எங்களை விட்டுப் பிரிந்துள்ளார்.

 

அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தனிப்பட்ட முறையிலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாருக்கு எல்லாம் வல்ல இறைவன் மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கம் கிடைக்க பிரார்த்திப்போம்.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال