JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா அறிவித்தல் - கடையாமோட்டையைச் சேர்ந்த அபூசாலி அவர்கள் காலமானார்.

கடையாமோட்டையைச் சேர்ந்த அபூசாலி அவர்கள் காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் பரீதா உம்மாவின் அன்புக் கனவரும் அஸீஸ், நிஸார், ஹபீபா உம்மா, பௌஸியா உம்மா, மன்சூர் ஆகியோரின் சகோதரரும், நௌபர், நஜிமுநிஸா, ரிஸ்வான், நிஸ்தார், ஜவாஹிர், ஆகியோரின் அன்பு தந்தையுமாவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (20) காலை 9.30 மணிக்கு கடையாமோட்டை முஸ்லிம் மையவாடியில்  நல்லடக்கம் செய்யப்படும்.


اَللّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ


பொருள் :- இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக! இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக! மேலும் இவரை சுவனத்தில் பிரவேசிக்க செய்வாயாக! மேலும் இவரை கப்ரின் வேதனையிலிருந்து காப்பாயாக!


ஆதாரம்: முஸ்லிம்




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال