JobVibe.lk - Sri Lanka Job Portal

மதுரங்குளி பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு!

மதுரங்குளி வர்த்தக சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.டி. அமான், மதுரங்குளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.கே.ஜி. விக்கிரமசிங்க ஏற்பாட்டில் மதுரங்குளி ஜும்மா மஸ்ஜித் அனுசரணையில்  இடம்பெற்ற இப்தார் நிகழ்வு நேற்று (20) மதுரங்குளி பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் அதிதிகளாக புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பீ. ஹேரத், புத்தளம் மாவட்ட மேலதிக செயலாளர் ரவீந்திர விக்கிரமசிங்க புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.பி.எஸ். ஜெயமாஹா, முந்தல் பிரதேச செயலாளர் ரொஹான் பியந்த திசாநாயக்க மற்றும் புத்தளம் பிரதேச சபை தலைவர் அஞ்சன சந்தருவன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம். றியாஸ், மதுரங்குளி வர்த்தக சங்க தலைவர் எம்.எஸ்.டி. அமான், மதுரங்குளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.கே.ஜீ. விக்கிரமசிங்க, மதுரங்குளி ஜும்ஆ மஸ்ஜித் தலைவர் எம்.எஸ்.எம். நிஸ்தார், முந்தல் - மதுரங்குளி பலநோக்கு கூட்டுறவுச் சங்க தலைவர் ஏ.எச்.எம். ஹாரூன், கல்பிட்டி பிரதேச சபை முன்னாள் தலைவர் எம்.எஸ். சேகுஅலாவுதீன், மதுரங்குளி மேர்ஸி கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் பௌசுல் ரஹ்மான், மேர்ஸி கல்வி நிறுவனத்தின் திட்டமிடல் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். முனாஸ் (நளீமி)  மதுரங்குளி வர்த்தகர்கள், அக்கரைப்பற்று ஏற்றுமதி தொழிலதிபர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


இந்நிகழ்வில் இன,மத, பேதமின்றி சகல இன மக்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.




























Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال