JobVibe.lk - Sri Lanka Job Portal

இலங்கையில் ஒரே நாளில் பதிவான அதி கூடிய கொவிட் மரணங்கள் : 214 பேர் - ஆண் - 120, பெண் - 94

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 214 மரணங்கள் நேற்று (26) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 8,157 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 214 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 8,371 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இவ்வாறு மரணமடைந்த 214 பேரில், 120 பேர் ஆண்கள், 94 பேர் பெண்கள் என்பதுடன், 60 வயதுக்கு மேற்பட்டோர் 151 பேர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال