JobVibe.lk - Sri Lanka Job Portal

சாய்ந்தமருதில் "மீஸானின்" சுனாமி நினைவுதின துஆ பிராத்தனை.

அபு ஹின்ஸா 

கடந்த 2004 உலகை தாக்கிய  பேரலையின் 16 ஆவது ஆண்டு நினைவு தின துஆ பிராத்தனையும் குரான் தமாம் செய்யும் நிகழ்வும் இன்று காலை அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது அல்- அக்பர் ஜூம்மாபள்ளிவாசலில் நடைபெற்றது. 

சுனாமியால் உயிர்நீத்த உறவுகளுக்கான துஆ பிரார்த்தனையை சாய்ந்தமருது அல் அக்பர் ஜூம்மா பள்ளிவாசலின் பேஸ் இமாம் அல்ஹாபிழ் மௌலவி எம்.ஐ.எம். றியாஸ் (அல்தாபி) நிகழ்த்தினார். இந்நிகழ்வில் மீஸான் பௌண்டஷன் தவிசாளர் நூருல் ஹுதா உமர், சாய்ந்தமருது அல் அக்பர் ஜூம்மாபள்ளிவாசலின் தலைவர் ஏ.இஸ்ஸதீன், உப தலைவர்கள், பொருளாளர் உட்பட நிர்வாகிகள், அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் பிரதிச்செயலாளர் ஏ.ஏசி.எம்.நிஸார் உட்பட செயற்குழு உறுப்பினர்கள், சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ மஜீத், சாய்ந்தமருது சத்குரு மக்காம் தலைவர் எம்.ஏ.எம். ஜப்பார், சாய்ந்தமருது மருதம் கலைக்கூடலின் தலைவர் அஸ்வான் எஸ் மௌலானா, செயலாளர், பிரதித்தலைவர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.












Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال