JobVibe.lk - Sri Lanka Job Portal

முல்லைத்தீவு மாவட்டத்தில் அபிவிருத்தி குழுக் காரியாலயம் திறந்து வைப்பு.

முல்லைத்தீவு மாவட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும் மாவட்ட அபிவிருத்தியை துரிதப்படுத்தி நேர்த்தியான சேவையை வழங்கும் நோக்கில் முல்லைத்தீவு  மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்  காரியாலயமொன்று இன்றைய தினம் (27.10.2020) முல்லைத்தீவு  மாவட்ட கச்சேரியில் இன்று காலை 9.30 மணிக்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான காதர் மஸ்தான்   திறந்து வைத்தார்.

குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு  மாவட்ட அரசாங்க அதிபர் திரு. விமலநாதன் ,மேலதிக அரசாங்க அதிபர் திரு.கே.கணகேஸ்வரன் ,பிரதம கணக்காளர் திரு.ஜேசு லோரன்ஸ்,திட்டமிடல் பணிப்பாளர் திரு.கிருபாசுதன் மற்றும் முல்லைத்தீவு  மாவட்ட பிரதேச செயலகங்களின் பிரதேசச் செயலாளர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள், அரச உத்தியோகத்தர்கள் எனப் பலரும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஊடகப்பிரிவு







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال