JobVibe.lk - Sri Lanka Job Portal

மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படுகிறது - திகதி அறிவிப்பு

எதிர்வரும் ஜுலை மாதம் 06ஆம் திகதி முதல் நாட்டிலுள்ள பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


தரம் 05 – 11 – 13 ஆகிய மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் குறித்த தினத்தில் ஆரம்பமாகவுள்ளன.


இதனை, கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அத்துடன், நான்கு கட்டங்களாக பாடசாலை நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


முதற்கட்டமாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்காக ஜுன் 29ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இம்முறை கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைகள் செப்டெம்பர் 07ஆம் திகதி முதல் ஒக்டோபர் 02ஆம் திகதிவரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.



Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال