JobVibe.lk - Sri Lanka Job Portal

இறுதி நேரத்தில் முடிவு செய்வோம்


அமைச்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எம்.பிக்கள், நாடு என்ற ரீதியில் எடுக்கக்கூடிய சிறந்த தீர்மானத்தை எடுப்பார்கள் என, நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
அத்துடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மிகச் சிறந்த தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாக தெரிவித்த அவர், அது எத்தகைய தீர்மானம் என்பது தொடர்பில்  இறுதி நேரத்திலேயே முடிவு செய்யப்படும் என்றார்.
 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில், இன்று (21) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال