JobVibe.lk - Sri Lanka Job Portal

தினச்சுடர் தேசிய விருது விழாவில் ஏறாவூர் இபா லாபீர் இளம் கவிஞர் விருது மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸின் ஏற்பாட்டில் நடைபெற்ற தினச்சுடர் தேசிய விருது வழங்கும் விழாவின் மூன்றாம் கட்ட நிகழ்வு கடந்த (21) மாளிகைக்காடு பாவா றோயல் வரவேற்பு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

கலாநிதி முபாரக் அப்துல் மஜீத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கலந்து கொண்டு, கலை, இலக்கியம், ஊடகம், சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 54 ஆளுமைகளுக்கு தேசிய விருதுகளை வழங்கிக் கௌரவித்தார்.

மேலும், சிரேஷ்ட ஊடகவியலாளர்களான எம்.வை. அமீர், பாறூக் ஷிஹான் மற்றும் கவிஞர் எஸ். ஜனூஸ் ஆகியோருக்கும் விசேட விருதுகள் வழங்கப்பட்டன.

2004ஆம் ஆண்டு முதல் பல்வேறு துறைகளில் சாதனை படைப்போரை அடையாளம் கண்டு கௌரவித்து வரும் தினச்சுடர் தேசிய விருது விழா, இளம் தலைமுறையினரின் திறமைகளை ஊக்குவிக்கும் நிகழ்வாகவும் அமைந்தது.






Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال