எம்.யூ.எம்.சனூன்
பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையின் பிரகாரம் ஆனமடு பிரதேச சபையால் செயல்படுத்தப்பட்ட கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், கிவுல பிரிவில் அமைந்துள்ள ஒரு கிலோ மீட்டர் தூரம் கொண்ட கிவுல கட்டுவ வீதி அபிவிருத்திப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்தன.
ஆனமடு பிரதேச சபையின் தலைவர் ஆலோக பண்டாரவின் வழிகாட்டலில், மோட்டார் இயந்திரத்தைப் பயன்படுத்தி, சாலை சமப்படுத்தப்பட்டு பொரள் பாதையாக சீரமைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம், பல ஆண்டுகளாக இச்சந்தியில் பயணித்த அப்பகுதி மக்கள் எதிர் கொண்ட பல சிரமங்கள் தீர்க்கப்பட்டுள்ளன.
பிரதேச சபையின் அதிகார வரம்பிற்குள் எந்தவொரு பிரிவையும் விட்டுவிடாமல், ஒவ்வொரு பிரிவிற்கும் அபிவிருத்தியின் பலன்களை நியாயமாக வழங்குவதே எங்களது முதன்மை நோக்கமாகும் என ஆனமடு பிரதேச சபை தலைவர் ஆலோக பண்டார தெரிவித்தார்.
இந்த அபிவிருத்திப் பணிகளை வெற்றி பெறச் செய்ய ஆதரவளித்த, ஒத்துழைப்பை வழங்கிய பிரதேச மக்கள் அனைவருக்கும் அவர் மனமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.




