(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
இந்தியப் பெருங்கடலின் முக்கியமான கடல்சார் போக்குவரத்துப் பாதைகளின் பாதுகாப்பிற்காக பங்குதாரர்களின் கடல்சார் திறன்களைக் கட்டியெழுப்பும் பொருட்டு, ஐரோப்பிய ஒன்றியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் EU CRIMARIO திட்டத்தின் கீழ் (The European Union’s Critical Maritime Routes Indian Ocean - EU CRIMARIO), இந்தோ-பசிபிக் பிராந்திய தகவல் பகிர்வுத் தளத்தை (Indo-Pacific Regional Information Sharing platform - IORIS) பயன்படுத்துவது தொடர்பான சீரான நடைமுறை விதியை தயாரித்தல் (IORIS National Standard Operating Procedure) குறித்து, இலங்கை கடற்படையின் திறன்களை மேம்படுத்துவதற்காக கொழும்பு கலங்கரை விளக்க உணவக வளாகத்தில் (Lighthouse Galley) நடாத்தப்பட்ட பயிற்சிப் பட்டறை வெள்ளிக்கிழமை (2026 ஆகஸ்ட் 28) வெற்றிகரமாக நிறைவுற்றது.
இதற்கமைய, இலங்கை கடற்படையின் நடவடிக்கைத் திணைக்கள அதிகாரிகளின் திறன் விருத்தியை நோக்கமாகக் கொண்டு, EU CRIMARIO திட்டத்தின் பயிற்சித் திட்டமிடல் மற்றும் ஆலோசகரும், இலங்கைப் பிரதிநிதியுமான Mr. Bjon அவர்களின் வளப்பங்களிப்பில், சமுத்திரக் கூட்டுறவு, ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் தொடர்பு (Maritime Cooperation, Coordination and Communication - MARCO3) தொடர்பான பயிலரங்கு 2026 ஆகஸ்ட் 17 முதல் 21 வரையிலும்; மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத் தகவல் பகிர்வுத் தளத்தைப் பயன்படுத்துவது தொடர்பான தரப்படுத்தப்பட்ட செயல்பாட்டு நடைமுறையைத் தயாரிப்பது குறித்த பயிலரங்கு 2026 ஆகஸ்ட் 24 முதல் 28 வரையும் கொழும்பு கலங்கரை விளக்க உணவக வளாகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.














