JobVibe.lk - Sri Lanka Job Portal

திகாமடுல்ல மீடியா போரத்தின் அறிமுக நிகழ்வு..!

திகாமடுல்ல மீடியா போரத்தின் அறிமுக நிகழ்வு ஒலுவில் மசாலா ரெஸ்டுடனில் நேற்று (14) நடைபெற்றது.


போரத்தின் தலைவர், சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எப்.றிபாஸ் முன்னிலையில் போரத்தின் ஆலோசகர் ஒலி, ஒளிபரப்பாளர் உமர் லெப்பை யாக்கூப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி டாக்டர் எம். எஸ். எம். சம்சுதீன் பிரதம அதிதியாகவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என். எம்.அமீன் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.


நிகழ்வில் போரத்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ரீசேட் வெளியீட்டு வைக்கப்பட்டதுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் உட்பட சமூக சேவையாளர்கள் சிலர் கௌரவிக்கப்பட்டனர்.


பிரதம அதிதினால்  போரத்தின் உறுப்பினர்களுக்கு ரீ சேட் மற்றும்  நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.











Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال