JobVibe.lk - Sri Lanka Job Portal

தமிழ் ஊடகர்களுக்கான புதிய அமைப்பு தமிழ்ச் சங்கத்தில் ஞாயிறு விசேட கூட்டம்

கற்பிட்டி செய்தியாளர் சியாஜ்

இலங்கையில் அச்சு , இலத்திரனியல் ,இணையதள மற்றும் பதிவு செய்யப்பட்ட சமூக ஊடகங்களில் பணிபுரியும் ஊடகவியலாளர்களுக்கென துணிந்து ,தனித்துவத்துடன் செயற்படக்கூடிய வகையிலான அமைப்பொன்றை உருவாக்கும் வகையில் விசேட கூட்டமொன்று எதிர்வரும் ஞாயிறு 16 ஆம் திகதி காலை 10 மணிக்கு  கொழும்பு தமிழ்ச் சங்கத்தில்  இடம்பெறவுள்ளது.


இதர ஊடக அமைப்புகளில் அங்கம் வகிக்காத , ஊடகவியலாளர்களுக்கென தனித்துவத்துடன் இயங்கு நிலையில் செயற்படவேண்டிய அமைப்பின் அவசியத்தை விரும்பும் ,துணிந்து செயற்படக்கூடிய ஊடகவியலாளர்கள் இதில் கலந்து கொள்ளுமாறு இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்யும் சிரேஷ்ட ஊடகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தமிழ் ஊடகவியலாளர்களின் பிரச்சினைகளுக்கு குரல்கொடுக்கும் ,அரசியல் பின்னணி அற்ற  அமைப்பின் தேவை காலத்தின் கட்டாயம் என்றும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.


வடக்கு, கிழக்கு மற்றும் மலையக செய்தியாளர்கள் உட்பட அனைத்து ஊடகங்களிலும் உள்ள ஊடகர்கள் நிச்சயம் இதில் கலந்துகொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال