JobVibe.lk - Sri Lanka Job Portal

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் படி கற்பிட்டி கோட்ட மட்டத்தில் கண்டக்குழி முஸ்லிம் மகா வித்தியாலயம் முதலாம் இடம்.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

இம்முறை வெளிவந்த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கற்பிட்டி கோட்ட மட்ட தமிழ் மொழி மூல பாடசாலைகளில் கண்டக்குழி முஸ்லிம் மகா வித்தியாலயம் முதலாம் இடத்தை பெற்றுள்ளது   


கற்பிட்டி கோட்ட மட்டத்தில் உள்ள 20 பாடசாலைகளில் கண்டக்குழி முஸ்லிம் மகா வித்தியாலயம் 90 சதவீத சித்திகளை பெற்று முதலாம் இடத்தை பெற்றுள்ளதுடன். புத்தளம் வலய மட்டத்தில் உள்ள 52 பாடசாலைகளில் நான்காம் இடத்தையும் வடமேல் மாகாணத்தில் உள்ள 131 பாடசாலைகளில் பதினெட்டாம் இடத்தையும் பெற்றுள்ளதாக கண்டக்குழி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் எம்.பீ ஜெஸிம் தெரிவித்துள்ளார்.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال