JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி பிரதேசத்தில் டெலிபோன் சின்னத்தின் வெற்றியை உறுதிப்படுத்தும் பிரச்சார பணி

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

கற்பிட்டி பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக பிரச்சார பணி  ஐக்கிய மக்கள் சக்தியின் கற்பிட்டி அமைப்பாளர் எம்.எப்.எம் றில்மியாஸ் தலைமையில் தினசரி இடம்பெற்று வருகிறது.


இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் கற்பிட்டி பிரதேச மகளீர் அமைப்பின் செயலாளர் கலைச் செல்வி,   அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம் தாஹீரின் இணைப்பாளர் பீ.எம் பாஹிம், முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரும் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான எஸ்.எச்.எம் நியாஸ் , பிரதேச சபையின் வேட்பாளரும் பாராளுமன்ற வேட்பாளருமான ஏ.ஆர்.எம் முஸம்மில் மற்றும் கற்பிட்டி பிரதேச ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் கலந்து கொள்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.










Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال