JobVibe.lk - Sri Lanka Job Portal

நல்லாந்தழுவை அஸ் - ஸபா பாலர் பாடசாலையின் சிறுவர் சந்தை

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம். யூ.எம் சலூன்)

நல்லாந்தழுவை அஸ் - ஸபா பாலர் பாடசாலையின் வருடாந்த சிறுவர் சந்தை ஞாயிறு (04) பாடசாலை வளாகத்தில் பொறுப்பாசிர்களான என்.எப். றிகாஸா மற்றும் ஏ.எப். முஜாஹிதா தலைமையில் இடம்பெற்றது.


இதன்போது பாலர் பாடசாலை மாணவர்களின் வியாபார பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.


இச்சிறுவர் சந்தை மூலம் சிறுவர்களின் வெளிக்கள செயற்பாட்டு திறன் விருத்தி செய்யப்படுவதுடன் கொடுக்கல் வாங்கல் அறிவும் விருத்தியடைய வழிகோல்வதாக பாலர் பாடசாலையின் பொறுப்பாசிரியர்  தெரிவித்தார்.


இந்நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர்கள், ஊர்மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.


















Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال