JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டியில் இடம்பெற்ற ஐ.ம.சக்தியின் வெற்றியை உறுதிப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)


கற்பிட்டியில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கற்பிட்டி பிரதேச சபையின் வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற வேட்பாளருமான ஏ.ஆர்.எம் முஸம்மில் தலைமையில் அவரின் இல்லத்தில் அன்மையில் இடம்பெற்றது.


இக் கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சக்தியின் கற்பிட்டி நகர அமைப்பாளர் எம்.எப்.எம் றில்மியாஸ் , சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கற்பிட்டி அமைப்பாளர் எம்.எச்.எம் ஹில்மி ஐக்கிய மக்கள் சக்தியின் கற்பிட்டி பிரதேச மகளீர் பிரிவின் செயலாளர்  கே. கலைச் செல்வி , கற்பிட்டி பிரதேச பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், வர்த்தகர்கள் மீனவர்கள் , உலமாக்கள் என பலரும் கலந்து கொண்டனர்


இக்கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை கற்பிட்டி பிரதேசத்தில் உறுதிப்படுத்துவது பற்றியும் அதற்கான வேலைத்திட்டம் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال