JobVibe.lk - Sri Lanka Job Portal

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இலங்கை கனிய வள கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.


இதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாயினால் அதிகரித்து அதன் புதிய விலை 371 ரூபாவாகும்.


அத்துடன், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாயினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 456 ரூபாவாகும்.


இதேவேளை ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை, 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 363 ரூபாவாகும்.


அத்துடன், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 468 ரூபாவாகும்.


அத்துடன், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 26 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 262 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال