JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா நல்லடக்கம் பற்றிய அறிவித்தல்

புத்தளம் -  இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க். M.H.M. முனீர் (முஹம்மதி) அவர்கள் இன்று (19) காலமானார்கள்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிர் ராஜிவூன்.


அன்னார்  காலம் சென்ற முஹம்மது ஹுஸைன், உம்மு ரஹ்மா ஆகியோரின் அருமைப் புதல்வரும், மௌலவியா நபீனா அவர்களின் அன்புக் கணவரும், நுஹா, நதா, நஹ்பா, நபீஹ், நாஸிஹ், நஹ்மா, நபாஹா ஆகியோரின் அன்புத் தந்தையும், முபஷ்ஷிர், சப்ரின் ஆகியோரின் மாமனாரும், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அமீர் அஷஷெய்க் M.H.M. உஸைர் (இஸ்லாஹி), முனீரா, உஸைரா, நும்ரா ஸாஜிதா, மஸ்ஹரா ஆகியோரின் மூத்த சகோதரரும், ஹனீஸ், அஷ்ஷெய்க் H.M.மின்ஹாஜ் (இஸ்லாஹி), ஆசிரியர் றிஸ்வான் (ஸாஹிரா தேசிய பாடசாலை) , பவாஸ் (அஸ்ஹரி), ரிபாத். நிஷாத், ரிஹாத். நவ்ஷான், ரபியுல்லா ஆகியோரின் மைத்துனரும், காலம் சென்ற மஹ்மூத் ஹஸரத் அவர்களின் மூத்த பேரருமாவார்.



அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை (20) காலை 09.00 மணிக்கு முஜாஹிதீன் பள்ளி மஹல்லாவிலுள்ள அன்னாரின் தாயார் வீட்டிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு  மஸ்ஜிதுல் பகா மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இச்சகோதரருக்கு  அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும், மன அமைதியையும் கொடுப்பானாக.


நீங்களும் உங்களது பிரார்த்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.


*اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار


தகவல்

சகோதரர் 

அஷ்ஷெய்க் M.H.M. உஸைர் (இஸ்லாஹி)




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال