எம்.யூ.எம்.சனூன்
நாடளாவிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வரும், "வீடு தேடி திறன் மேம்பாட்டு" பிரச்சார நிகழ்வு
புத்தளம் 617/சி கிராம சேவகர் பிரிவில் சமூக மேம்பாட்டு சபையின் ஏற்பாட்டில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலை கல்வியை நிறைவு செய்த மாணவர்களை நேரடியாக சந்தித்து, தொழிற்கல்வி குறித்த விழிப்புணர்வு இதன் போது துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டன.
குறித்த பிரதேசத்தின் கிராம சேவையாளர், புத்தளம் பிரஜா சக்தி சமூக மேம்பாட்டு சபை தலைவர் சர்ராஜ் லாபிர் ஆகியோரின் வழிகாட்டலில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தகவல் தொழில் நுட்பம், தையல், மின்சாரம், சமையல், அழகு கலை பராமரிப்பு உட்பட பல தொழிற் துறைகள் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் புத்தளம் பிரஜா சக்தி சமூக மேம்பாட்டு சபை தலைவர் சர்ராஜ் லாபிர் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளார்.

