JobVibe.lk - Sri Lanka Job Portal

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 27 பேர் இரு வாரங்களில் கடற்படையினரால் கைது

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இலங்கை கடற்படையினால், 2026 ஜூன் 16 முதல் 30 வரையிலான காலப்பகுதியில், நாட்டின் கடல் பிராந்தியத்தை உள்ளடக்கிய வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம்; சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இருபத்தேழு (27) நபர்களுடன், பத்து (10) டிங்கி படகுகள் மற்றும் இரண்டு (02) கேனோ படகுகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டது. 


அதன்படி, திருகோணமலை சூடைகுடா, ஸ்விட் பே, யாழ்ப்பாணம் உடுத்துறை, வெத்தலைக்கேணி, கட்டைக்காடு, சிலாவத்துறை சாவாரிபுரம் கடற்கரை மற்றும் கடல் பிராந்தியங்களை உள்ளடக்கிய வகையில், கிழக்கு, வடக்கு மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளைகளினால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகளின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், வணிக வெடிபொருட்கள், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மற்றும் மீன்பிடி படகுகள் என்பன, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை, மூதூர், யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகங்களுக்கும் மற்றும் மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கும் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.














Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال