JobVibe.lk - Sri Lanka Job Portal

கப்பலடியில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் செம்பியனானது பவர் ஹீட்டர்ஸ் அணி

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கப்பலடியின் இளைஞர்கள் மற்றும் பாடசாலையின் பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து கப்பலடியில் முதல் தடவையாக ஹஜ் பெருநாளை முன்னிட்டு நடைபெற்ற கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதியில் வென்று செம்பியனாக மகுடம் சூடியது யாசீர் தலைமையிலான பவர் ஹீட்டர்ஸ் அணி 


ஹஜ் பெருநாளை முன்னிட்டு கப்பலடி இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி கிரிக்கெட் சுற்றுப் போட்டி கப்பலடி பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை (30) இடம்பெற்றது இதில் ஐந்து அணிகள் கலந்து கொண்டன.


இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று செம்பியனாக மகுடம் சூடிய யாசீர் தலைமையிலான பவர் ஹீட்டர்ஸ் அணிக்கு வெற்றி கிண்ணமும் 50,000/- ரூபாய் ரொக்கப் பணமும் வழங்கப்பட்டது. இதன் போது அணித் தலைவர் யாசீர் தமது அணிக்கு கிடைத்த பணப் பரிசினை பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைக்கு அன்பளிப்பு செய்வதாகவும் அறிவித்தார்.


அத்தோடு இவ்வாறான சுற்றுப் போட்டிகளை கப்பலடி கிராமத்தில் தொடர்ந்து நடாத்துவதற்கான முயற்சிகளை கப்பலடி இளைஞர்களுடன் இணைந்து எமது அணி வீரர்களும் மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.






Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال