JobVibe.lk - Sri Lanka Job Portal

வண்ணாத்திவில்லு பிரதேச செயலாளர் பிரிவில் தித்வா அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காசோலை வழங்கும் ஆரம்ப கட்ட நிகழ்வு.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் மாவட்டத்தின் வண்ணாத்திவில்லு பிரதேச செயலாளர் பிரிவில் தித்வா அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காசோலை வழங்கும் ஆரம்ப கட்ட நிகழ்வு வண்ணாத்திவில்லு பிரதேச சபை பிரதான மண்டபத்தில் திங்கட்கிழமை (25) காலை இடம்பெற்றது.


பொது நிர்வாக அமைச்சர் சந்தன அபயரத்ன, தேசிய மக்கள் சக்தியின் பிரதி அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான கயான் ஜனக, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசல், வண்ணாத்திவில்லு பிரதேச செயலாளர், வண்ணாத்திவில்லு பிரதேச சபையின் செயலாளர், பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள், அனைத்து கிராம அலுவலர்கள், அபிவிருத்தி அதிகாரிகள் மற்றும் வண்ணாத்திவில்லு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் சுரங்க , பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் பிரஜா சக்தி தலைவர்கள், தித்வா அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களும் இதில் பங்கேற்றனர்.


வண்ணாத்திவில்லுவில் வழங்கப்பட்ட நிவாரணம் மாத்திரம் 15 கோடி ரூபாவை தாண்டியுள்ளது. முழுமையாக சேதமடைந்த வீடுகள் 68, பகுதியளவு சேதமடைந்த வீடுகள் 100 க்கான பயனாளிகளுக்கு இதன்போது காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.


















Previous Post Next Post

نموذج الاتصال