JobVibe.lk - Sri Lanka Job Portal

மன்னாரில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 830 கிலோ பீடி இலைகளை கைப்பற்றிய கடற்படை.

 (கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

மன்னார் வடகடல் மற்றும் நடுகுடா கடலோரப் பகுதிகளில் வெள்ளி மற்றும் சனி (15,16) ஆகிய தினங்களில் கடற்படையினரால்  நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட எண்ணூற்று முப்பது (830) கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகளைக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.


அதன்படி, மன்னார் வடகடல் மற்றும் நடுக்குடா கடலோரப் பகுதியை உள்ளடக்கி, வட மத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல்களான தம்மென்னா மற்றும் கஜபாவால் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது பன்னிரண்டு (12) சந்தேகத்திற்கிடமான கப்பல்கள் ஆய்வு செய்யப்பட்டன. அங்கு, கடற்படை நடவடிக்கைகளின் போது, ​​சட்டவிரோதமாகக் கடத்தும் முயற்சியில் கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட சுமார் எண்ணூற்று முப்பத்தொன்று (831) கிலோகிராம் பீடி இலைகளை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.


மேலும், இந்த நடவடிக்கைகளின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் வரை கடற்படையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.





Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال