Breaking News

புத்தளம் - சிலாபம் பிரதேசத்திற்கான புதிய காதி நீதிபதிக்கு PFCD அமைப்பு வாழ்த்து..!

ரஸீன் ரஸ்மின்

புத்தளம் - சிலாபம் பிரதேசத்திற்கான புதிய காதி நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள புத்தளம் எருக்கலம்பிட்டி (நாகவில்லு) ஜூம்ஆ மஸ்ஜிதின் பிரதம இமாமாகவும், நாகவில்லு புஹாரியா அரபுக் கல்லூரியின் அதிபராகவும் கடமைபுரிந்து வரும் சமாதான நீதவான் அஷ்ஷெய்க் என்.அஸ்மீர் (உஸ்வி) அவர்களுக்கு, சமூக அபிவிருத்திக்கான மக்கள் அமைப்பு (PFCD) தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,


இலஞ்ச குற்றச்சாட்டின் பேரில் புத்தளம் பிரதேசத்தின் முன்னாள் காதி நீதிபதி அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து, புத்தளத்தில் நீண்ட காலமாக காதி நீதிமன்ற நீதிபதி பதவி வெற்றிடமாகவே காணப்பட்டு வந்தது.


எனினும், பதில் காதி நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டு, விவாக விவாரத்து தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்த போதிலும், நிரந்தர காதி நீதிபதி ஒருவர் இல்லாமையால் புத்தளம் மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகி வந்தனர்.


திருமணங்கள், விவாகரத்துகள், மற்றும் குழந்தைகள் பராமரிப்பு போன்ற விடயங்களை முறையாக கையாள்வதிலும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.


இந்த நிலையிலேயே புத்தளம் - சிலாபம் பிரதேசத்திற்கான புதிய காதி நீதிபதியாக அஷ்ஷெய்க் என். அஸ்மீர் உஸ்வி , நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் 2025.11.03 ஆம் திகதி முதல் செயற்படும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.


இடம்பெர்ந்தோருக்கான காதி நீதிமன்றம் மற்றும் புத்தளம் காதி நீதிமன்றம் என்பனவற்றில் பல வருடங்கள் ஜூரியாக கடமைபுரிந்துள்ள புதிய காதி நீதிபதி அஷ்ஷெய்க் என். அஸ்மீர் உஸ்வி , நீதித்துறையில் மேலும் சிறக்கவும், சமூகத்திற்கு சிறப்பாக சேவை செய்ய வேண்டும் எனவும் பிரார்த்தனை செய்கிறோம்.


மேலும், மக்களுக்கு நீதி வழங்குவதில் தொடர்ந்து சிறந்து விளங்க வேண்டும் என்பதுடன் அவருடைய கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம் என புத்தளத்தில் இயங்கி வந்த சமூக அபிவிருத்திக்கான மக்கள் அமைப்பு (PFCD) தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளது.




No comments