JobVibe.lk - Sri Lanka Job Portal

கொய்யாவாடி பாடசாலையில் இடம்பெற்ற சின்னம் சூட்டும் நிகழ்வும், ஆசிரியர்கள் கௌரவிப்பும்

(முஹம்மட் இல்ஹாம்)

கற்பிட்டி கொய்யாவாடி முஸ்லிம் மகா வித்யாலயத்தில்  மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வும், உயர் தர கலைப்பிரிவு ஆசிரியர்கள் கௌரவிப்பும் பாடசாலையின் அதிபர் எம் எச் எம் நஜாத் தலைமையில் திங்கட்கிழமை (23) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் நுரைச்சோலை பொலிஸ் நிலைய அதிகாரிகளான டபிள்யூ . எம்.டி.எம் திலகரத்ன, எல்.எஸ்.ஏ பெட்ரீஸீயா,  புஸ்பகுமார, நுரைச்சோலை கிராம சேவகர் என் எம் நவ்பல், ஒய்வு பெற்ற முன்னாள் அதிபர் என் எம். ஐயூப்கான் பூலாச்சேனை மு.ம.வி ஆசிரியர் எஸ் எம். அலி சப்ரி ஆலங்குடா மு.ம.வி ஆசிரியர் எஸ் மஸ்பிர் , திகழி மு.ம.வி ஆசிரியர் ஏ.ஜீ.எம்.ரியாழ், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் டாக்டர் ஏ. றினோஸ்,  உறுப்பினர்களான ஏ.எம் மஸீர் , மௌலவி ஐ.எம்.பஸால் ,  மௌலவி ஏ.எஸ் அர்ஸத் ஆகியோருடன் மற்றும் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.


இந்நிகழ்வில் மாணவத்லைவர்களுக்கான சின்னம் அனிவித்தல்  மற்றும், உயர் தர கலைப்பிரிவு ஆசிரியர்கள் கௌரவிப்பும்   இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது .













Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال