JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா அறிவித்தல் - கனமூலையை பிறப்பிடமாகவும், விருதோடையை வசிப்பிடமாகவும் கொண்ட முஹம்மது ஷாஜஹான் அவர்கள் காலமானார்.

கனமூலையை பிறப்பிடமாகவும், விருதோடையை வசிப்பிடமாகவும் கொண்ட முஹம்மது ஷாஜஹான் அவர்கள்  இன்று (05) வியாழக்கிழமை  காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் மர்ஹூம்களான முஹ‌ம்ம‌து சரீப், சேகுநாச்சியா அவர்களின் அன்பு மகனும், கைருன் நிஸா அவர்களின்  அன்புக் கணவரும், முஹம்மது அர்கம், பாத்திமா சப்னா ஆசிரியை ( விருதோடை மு.ம.வி), சஸ்மினா ஆசிரியை (மதவாக்குளம் மு.ம.வி), அக்ஸா ஆகியோரின் அன்புத் தந்தையும், பைசல் மௌலவி, உம்மு நிஸா, ரிஸ்வான், சதாத் மௌலவி (அதிபர் - விருதோடை மு.ம.வி), ரபியூன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், முஹம்மது பாஹிம், நவ்பர், றிஸ்பிகான், மர்ஹுமா ஹனிதா பீவி, நஸீரா, சபாயா, றிஸ்மியா சித்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (05) அஸர் தொழுகையுடன் விருதோடை ஜூம்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار


தகவல்
மகன் -
முஹம்மது அர்கம்



Previous Post Next Post

نموذج الاتصال