JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி ஜென்னத்துல் அஸாபீர் இஸ்லாமிய பாலர் பாடசாலையில் சிறப்பாக இடம்பெற்ற வருடாந்த விளையாட்டு போட்டி

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ் - றிஸ்வி ஹூசைன், புத்தளம் எம் யூ எம் சனூன்)

கற்பிட்டி ஜென்னத்துல் அஸாபீர் இஸ்லாமிய பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு போட்டி புதன்கிழமை (30) பாடசாலையின் அதிபர் பாஹீமா தலைமையில் கற்பிட்டி புட்சல் உள்ளக விளையாட்டரங்கில் சிறப்பாக இடம்பெற்றது.


இந்நிகழ்வின் அதிதிகளாக  முன்னாள் புத்தளம் வலய கல்வி பணிமனையின் பிரதிக் கல்வி பணிப்பாளர் எஸ்.டி.எம் பைறூஸ்சமான் , கிராம உத்தியோகத்தர் எம் பீ.எம் அர்ஷத் மற்றும் கற்பிட்டியில் உள்ள ஏனைய பாலர் பாடசாலை ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்  


சிறார்களின் விளையாட்டு திறமைகளையும் ஆற்றல்களையும் வெளிக்கொணரும் நோக்கோடும் விளையாட்டுதுறையில் சிறுவர்களின் ஆர்வத்தை தூண்டும் வண்ணம் கடந்த 12 வருடங்களாக கற்பிட்டி ஜென்னதுல் அஸாபீர் இஸ்லாமிய பாலர் பாடசாலை  விளையாட்டு போட்டிகள் மற்றும் இணைபாடவித செயற்பாடுகளான சிறுவர் சந்தை, கண்காட்சி நிகழ்வுகள் என பல்வேறு நிகழ்வுகளையும் வெற்றிகரமாக செயற்படுத்தி வருகின்றது 


இச் சிறுவர் விளையாட்டு போட்டி நிகழ்வில் பங்குபற்றிய சகல மாணவர் சிறார்களுக்கும் கேடயங்கள் வழங்கி கௌரவித்தமையும் சிறப்பம்சமாகும். அத்தோடு இந்நிகழ்வு சிறப்புற ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்கள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் நலன்விரும்பிகள் என சகலருக்கும் தமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் அதிபர் பாஹீமா தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.













Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال