JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் அல் முஹ்பாத் முன்பள்ளியின் 30 வது வருட நிறைவும், வருடாந்த விளையாட்டு போட்டிகளும்.

புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்

புத்தளம் காஸிம் வீதியில் அமைந்துள்ள அல் முஹ்பாத் முன்பள்ளியின் 30 வது வருட நிறைவும், வருடாந்த விளையாட்டு போட்டிகளும் புத்தளம் நகர மண்டபத்தில் புதன்கிழமை (16) நடைபெற்றது.


முன்பள்ளி பொறுப்பாசிரியை லரீபா சுஹைல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக புத்தளம் நகர சபையின் செயலாளர் கீதானி ப்ரீதிகா, புத்தளம் மாவட்ட சமூக அபிவிருத்தி அதிகாரி ரத்னாயக்க, புத்தளம் நகர சபையின் சமூக அபிவிருத்தி அதிகாரி திருமதி ரதி, புத்தளம் முன்பிள்ளை பருவ அபிவிருத்தி அதிகாரி திருமதி. தயானி சுமனலதா, அல் முஹ்பாத் முன்பள்ளியின் முன்னாள் ஆசிரியை பௌசுல் அமீனா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


முன்பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்கள் பல்வேறு விதமான போட்டி நிகழ்வுகளில் பங்கேற்றனர்.


சகல மாணவர்களுக்கும் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு, பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.


உதவி ஆசிரியைகளான ஆர்.ஏ. ப்ராபாசினி இனோகா ரணசிங்க, பாத்திமா சாக்கியா, பாத்திமா நிஸ்ரின் ஆகியோர் மாணவர்களை நன்கு பயிற்றுவித்திருந்தனர்.
















Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال