JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி அமைப்பாளர் தாரீக் தலைமையில் இடம்பெற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் பிரச்சார பொதுக் கூட்டம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

இயலும் சிறி லங்கா எமக்காக நாட்டின் நாளைய எதிர்காலத்திற்காக  ஒரே அணியில் ஒன்றிணைவோம்  எனும் மகுடத்திற்கு அமைய எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் முகமாக கற்பிட்டியில் இடம்பெற்ற பிரச்சார பொதுக் கூட்டம் 


கற்பிட்டியின் ஐக்கிய தேசிய கட்சியின் நகர அமைப்பாளரும் முன்னாள் பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான ஜே.எம் தாரீக் தலைமையில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் முன்னாள் கொழும்பு மாநகர சபைத் தலைவர் ஆஸாத் சாவி, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியா, ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் அமைப்பாளர் ஜேசுதாஸன், முன்னாள் கற்பிட்டி பிரதேச சபையின் உறுப்பினர் அலாவுதீன், பாராளுமன்ற உறுப்பினர் சிந்தக மாயாதுன்னவின் கற்பிட்டி இணைப்பாளர் எம்.எச்.எம் நாசர், பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி றஹீமின் கற்பிட்டி இணைப்பாளர் யூ.எம் ஜின்னா,  முன்னாள் கற்பிட்டி பிரதேச சபையின் உறுப்பினரும் வடமேல் மாகாண ஆளுநரின் புத்தளம் இணைப்பாளருமான றபாத் அமீன் உள்ளிட்ட இன்னும் பல புத்தளம் மாவட்ட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.












Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال