Breaking News

ஜனாஸா அறிவித்தல் - விருதோடையைச் சேர்ந்த ஹபீபா உம்மா அவர்கள் காலமானார்

விருதோடையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மர்ஹூம்கலான  காசிம் முஹைதீன், ருகையா உம்மாவின் அன்பு மகள் ஹபீபா உம்மா அவர்கள்   இன்று (13)  காலமானார். 


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் காலம் சென்ற  செய்னுல் ஆப்தீன்  அவர்களின் அன்பு மனைவியும் பாஸர் (பஸீர்), மர்லியா, காலம் சென்ற ஜெஸ்மினா, பளீள் (குப்பைமரைக்கார்), ஹைருனிஸா ஆகியோரின் அன்புத் தாயாரும், லத்தீப், ரியாத், தாஹிரா, ரிஸானா ஆஹியோரின் மாமியும் ஆவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (13)  அஸர் தொழுகையுடன் விருதோடை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தாய்க்கு  அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


நீங்களும் உங்களது பிராத்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.


اللَّهُمَّ اغْفِرْ لَهَا ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْها  وَأَكرِمْ نزُلَها ، وَوسِّعْ مُدْخَلَهُا واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ  عَذَابِ النَّارِ


 தகவல்

மகன்  பளீள்.




No comments

note