JobVibe.lk - Sri Lanka Job Portal

சமீரக மற்றும் விருதோடை ரெட்பானா பள்ளிவாசல் பாதை புணரமைப்புக்கு புத்தளம் தூய தேச இயக்கம் நிதி உதவி

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

சமீரகம மற்றும் விருதோடை ரெட்பானா பகுதிகளில் வசிக்கும் மக்களின் குறைகளை இனம் கண்டு அவற்றுக்கான தீர்வுகளை தேடும் கள விஜயமொன்று   தூயதேச இயக்க தலைவர் இஷாம் மரைக்காரின் வேண்டுதலுக்கு அமைவாக  தூய தேச இயக்கத்தின் கற்பிட்டி பிரதேச  அமைப்பாளர் மொஹமட் ஹஸ்லான் தலைமையில் இடம்பெற்றது.


இக் கள விஜயத்தின் போது றிஸ்மின் மூலம் இனம் காணப்பட்ட முக்கிய பிரச்சினையான பாதை புனரமைப்பு சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டதுடன் அதற்கான தீர்வாக குறித்த வேலைத்திட்டத்திற்கான  நிதியும் தூய தேச இயக்கத்தின் தலைவர் இஷாம் மரைக்காரினால் ஒதுக்கீடு செய்யப்பட்டு கற்பிட்டி பிரதேச அமைப்பாளர் மொஹமட் ஹஸ்லான் மூலம் சமீகரம பள்ளி நிர்வாகத்தினரின் முன்னிலையில்  இயக்கத்தின் சமீரகம பிரதேச உறுப்பினர் ரஷீதிடம் வழங்கிவைக்கப்பட்டது.


இந்த நிகழ்வில் தூய தேச இயக்கத்தின் உறுப்பினர்களான  சஜான் மற்றும்  பைசர் ஆகியோர் கலந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال