JobVibe.lk - Sri Lanka Job Portal

ஓய்வு பெற்றுச் செல்லும் அதிபர் என்.எம்.எம்.நஜீப் அவர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழா!.



பு/நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் அதிபர் என்.எம்.எம்.நஜீப் அவர்கள் 2024.06.20 ஆம் திகதி ஓய்வு பெறுவதையிட்டு அதிபர் அவர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழா நேற்று (20) பாடசாலை வளாகத்தில் பதில் அதிபர் ஹுதைபா தலைமையில் கோலாகலமாக இடம்பெற்றது.



பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பாடசாலை உருவாக்கக் குழு ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அப்பாடசாலையின் ஸ்தாபக தலைவரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான எஸ்.ஆப்தீன் எஹியா விஷேட அதிதியாக முன்னாள் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் கே.எம்.எம்.பைஸர் மரிக்கார் ஆகியோரோடு அதிதிகளாக புத்தளம் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.ஏ.எச்.எம்.அருஜுனா, புத்தளம் - தெற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜீவிகா சந்திரசேகர, கல்விப் பணிப்பாளர் (ஆசிரியர் பிரிவு) திருமதி காந்தி லதா ஆகியோரோடு ஏராலமான பாடசாலை அதிபர்கள், ஓய்வு நிலை அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.



இந்நிகழ்வின் போது ஓய்வு பெற்றுச் செல்லும் அதிபரை சேவை நலன் பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு பாடசாலையின் ஸ்தாபக தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான எஸ்.ஆப்தீன் எஹியா அவர்களினால் அவரது எஹியா பௌண்டேஷன் ஊடாக புனித உம்ரா  செய்வதற்கான நிதியினை வழங்கி வைத்து, நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவித்தார். அதே போன்று புத்தளம் வலயக் கல்விப் பணிபாளர், புத்தளம் தெற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர், கல்விப் பணிபாளர் ஆகியோருக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைத்தார்.









அத்தோடு பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பாடசாலை உருவாக்கக் குழு ஏற்பாட்டில் அதிபரின் சேவைப் பாராட்டி CT100 மோட்டார் சைக்கிள் ஒன்றை அன்பளிப்பு செய்தனர்.





இதேவேளை புத்தளம் - தெற்கு கோட்டத்துக்குட்பட்ட அதிபர்கள் சங்கத்தினால்  ஓய்வு பெரும் அதிபரை பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.




இந்நிகழ்வில் ஓய்வு பெறும் என்.எம்.எம். நஜீப் அதிபரின் அதிபர் திரு. நடராஜா அதிபர் (ஓய்வு நிலை) வருகை தந்து தனது மாணவனை பொன்னாடை போர்த்தி வாழ்திய அதேவேளை நஜீப் அதிபர் அவர்களும் தனது அதிபரான திரு. நடராஜா அதிபர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.






இதன்போது  மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதோடு, ஏராலமான பெற்றோர்கள், நலன் விரும்பிகள், ஊர்மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.





















Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال