JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டியில் ஹஜ் பெருநாள் கவி அரங்கம்

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

கற்பிட்டி தமிழ் கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பட்டில் எதிர்வரும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு கற்பிட்டியில் முதன் முறையாக கவி அரங்கம் எனும் சிறப்பு நிகழ்வு ஒன்று 2024 ஜுன் மாதம் 21 ம் திகதி கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் பி.பகல் 03 மணிக்கு நடைபெற உள்ளது.


கற்பிட்டி கலை இலக்கிய துறையை ஊக்குவிக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழ் கலை இலக்கிய மன்றத்தின் கன்னி நிகழ்வாக இடம்பெற உள்ள கவி அரங்கம் நிகழ்வில் கற்பிட்டியில் இளை மறை காய்களாக காணப்படும் மூத்த கவிஞர்கள் மற்றும் இளம் புதுக் கவிஞர்கள் என தமது கவித் திறமைகளையும் ஆற்றல்களையும் வெளிப்படுத்த உள்ளனர்.


இந் நிகழ்வில்  கலை ஆர்வம் மிக்க சகலரும் கலந்து கொள்ளுமாறு கற்பிட்டி தமிழ் கலை இலக்கிய மன்றத்தின் செயலாளர் சியாஜ் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال