JobVibe.lk - Sri Lanka Job Portal

மதுரங்குளி - கனமூலையில் ஐக்கிய தேசிய கட்சியின் வலயக் காரியாலயம் திறந்து வைப்பு!.

 (நமது நிருபர்)

புத்தளம் - கற்பிட்டி பிரதேச சபைக்கு உட்பட்ட கடையாமோட்டை, கனமூலை வடக்கு, கனமூலை தெற்கு, சமீரகம, பெருக்குவற்றான், கொத்தாந்தீவு ஆகிய  கிராமங்களை உள்ளடக்கிய  வலய அமைப்பாளராக கனமூலையைச் சேர்ந்த ஏ.ஜே.எஸ். மரிக்கார் அவர்களை ஜனாதிபதியும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவினால் அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தார்.


அந்த வகையில் இக்கிராமங்களை உள்ளடக்கிய ஐக்கிய தேசிய  கட்சியின் வலயக் காரியாலயம் நேற்று (26) திறந்து வைக்கப்பட்டுள்ளது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளர் மோசஸ் ஜேசுதாசன் மற்றும் கடையாமோட்டை அமைப்பாளர் எம் .ஜெ. எம். நசார் உட்பட ஜக்கிய தேசிய கட்சியின்  முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال