JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் கற்பிட்டி அமைப்பாளரின் ஏற்பாட்டில் சமைத்த உணவு

(கற்பிட்டி எம்.எச் எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

கற்பிட்டி பிரதேசத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 1000  குடும்பங்களுக்கு இன்று(21)பகல் சமைத்த உணவு வழங்கும் நிகழ்வு ஐக்கிய மக்கள் சக்தியின் கற்பிட்டி அமைப்பாளர் எம்.எப்.எம் றில்மியாஸின் ஏற்பாட்டில் இடம்பெறுகின்றது.


இதில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி கற்பிட்டி பொலிஸ் நிலைய உதவிப் பொறுப்பதிகாரி முனசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் தொகுதியின் மகளீர் அணியின் செயலாளர் கலைச்செல்வி ஆகியோருடன் ஐக்கிய மக்கள் சக்தியின் தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال