JobVibe.lk - Sri Lanka Job Portal

விருதோடை பிரதான வீதியை புனரமைக்க ஆளுநரிடம் அமைப்பாளர் றபாத் அமீன் கோரிக்கை

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

விருதோடை பிரதான வீதியின் இரு மருங்கிலும் பொரல் போட்டு சோல்டர் அமைக்கப்படாமல் நீண்ட நாட்களாக காணப்படுவதனால் இவ் வீதியில் பயணம் செய்யும் வாகனங்களும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதுடன் வீதியும் சிதைவடையக் கூடிய நிலை ஏற்படும் அபாயமும் உள்ளது.


இவ் வீதி ஐக்கிய தேசிய முன்னணி அரசினால் 2015 ம் ஆண்டு போடப்பட்டது இவ் வீதி வடமேல் மாகாணத்திற்கு உட்பட்டதனால் வடமேல் மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் மேற்படி வீதியை புனரமைத்து தருமாறு வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட்  இடம் முன்னாள் கற்பிட்டி பிரதேச சபையின் உறுப்பினரும் ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்க பண்டாரவின் புத்தளம் மாவட்ட முஸ்லிம் விவகாரங்களுக்கான செயலாளர் ஏ.ஆர்.எம் றபாத் அமீன் கோரிக்கை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال