JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி குறிஞ்சிப்பிட்டி மழை வெள்ள பாதிப்பை பார்வையிட்ட அதிகாரிகள்

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

கற்பிட்டி பகுதியில் தொடர்ச்சியாக பேய்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் கற்பிட்டியின் குறிஞ்சிப்பிட்டி வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் 75 குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.


இவர்களுக்கான உடனடி நிவாரண உதவிகளை கற்பிட்டி பிரதேச செயலாளர் சமில இந்திக ஜெயசிங்க ஊடாக பெறப்பட்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கியதாக இப் பகுதிக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஆர்.எம் அஸ்ஹர் தெரிவித்தார்.


மேலும் கற்பிட்டி பிரதேச செயலக பிரிவிற்குள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கான கள விஜயம் கற்பிட்டி பிரதேச செயலாளர் சமில இந்திக ஜெயசிங்க தலைமையில் அனர்த்த சேவைகள் மத்திய நிலையத்தின்  பிரதிப் பணிப்பாளர் குணசேன தலைமையிலான அதிகாரிகள் சகிதம் நேரடியாக கள விஜயம் மேற்கொண்டபோது குறிஞ்சிப்பிட்டி வடக்கு கிராம சேவையாளர் பிரிவின் மழை வெள்ள பாதிப்பையும் பார்வை இட்டமை குறிப்பிடதக்கது.









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال