Breaking News

ஜனாஸா அறிவித்தல் - கனமூலை மந்தமான்தீவைச் சேர்ந்த அப்துல் சமது அவர்கள் காலமானார்

கனமூலையை பிறப்பிடாமாகவும், மந்தமான்தீவு (பாலத்தடி) யை வசிப்பிடாமாகவும் கொண்ட காலம் சென்றவர்களான செய்யது முஹம்மது, மரியம் பீவி ஆகியோரின் அன்பு மகன் அப்துல் சமது அவர்கள் காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் ஆயிஷா உம்மா அவர்களின் அன்புக் கணவரும், நஜீமா, றிஸானா, ரின்ஸா, ஹஸான், ஆகியோரின் அன்பு தந்தையும், நஜீம், றிஸான் ஆகியோரின் அன்பு மாமனாரும்,  அல்ஹாஜ் சஹீது, ஹாஜியானி நூர் நயீமா, வல்கீஸ் உம்மா, காலம் சென்ற ரஸீனா ஆகியோரின் அன்புச் சகோதரரும், அல்ஹாஜ் N.M.சித்தீக் (Farsana Export) அவர்களின் அன்பு மைத்துனருமாவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை (08) காலை 9.00 மணிக்கு கனமூலை நாவக்குடா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த  இத்தந்தைக்கு  அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


நீங்களும் உங்களது பிராத்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.


*اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار


தகவல்

குடும்பத்தினர்.





No comments

note