JobVibe.lk - Sri Lanka Job Portal

சாய்ந்தமருதில் கொவிட்19 விசேட 5 ஆயிரம் ௹பா கொடுப்பனவு வழங்கல்!

(றியாத் ஏ.மஜீத், நூருல் ஹுதா உமர்)

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் ஆலோசனையின் பேரில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் வறுமை ஒழிப்பு செயலணியின் தலைவர் பஷில் ராஜபக்ஷவின் வழிகாட்டலில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் வழங்கப்படும் கொவிட்19 விசேட கொடுப்பனவான 5000/- ரூபா சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட சமுர்த்திப் பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது சமுர்த்தி வங்கியில் சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம் தலைமையில் இன்று (12) ஆரம்பித்து வைக்கப்பட்டது.


இந்நிகழ்வுக்கு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இக்கொடுப்பனை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் மேலும் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.எல்.யூ. ஜூனைதா, வங்கி உதவி முகாமையாளர் எம்.யூ.ஹில்மி, மகா சங்க உதவி முகாமையாளர் எம் எஸ்.எம்.நெளஷாட் உள்ளிட்ட  சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال