JobVibe.lk - Sri Lanka Job Portal

பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பரினால் நற்பிட்டிமுனைக்கு 25 இலட்சம் ரூபா ஒதுக்கீடு.!

(அஸ்லம் எஸ்.மெளலானா)

05 இலட்சம் ரூபா நிதியில் அரபுக் கல்லூரிக்கு ஒலிபெருக்கி சாதனம், கதிரைகள் வழங்கிவைப்பு.!

20 இலட்சம் ரூபா நிதியில் கலாசார மண்டப நிர்மாண வேலைகள் விரைவில் ஆரம்பம்.!


பாராளுமன்ற உறுப்பினரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் அவர்களின் இந்த ஆண்டுக்கான (2026) பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் நற்பிட்டிமுனை பிரதேசத்திற்கு சுமார் 25 இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிதியில் ஓர் அங்கமாக 05 இலட்சம் ரூபா பெறுமதியான ஒலிபெருக்கி சாதனம் மற்றும் கதிரைகள், தாருல் ஹிக்மா மகளிர் அரபுக் கல்லூரிக்கு வழங்கி வைக்கப்பட்டன. 

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பரின் இணைப்புச் செயலாளரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயலாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான ஏ.சி.சமால்தீன், கல்முனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பளர் ஏ.எம். மஜீட், நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம். பளீல், தாருல் ஹிக்மா மகளிர் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் ஏ.எல். நாஸிர் கனி (ஹாமி) M.A., Phd(R) (விரிவுரையாளர்), ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நற்பிட்டிமுனை பிரதேச மத்திய குழு செயலாளர் ஏ.எஸ்.எம்.ஜௌபர், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஏ.எச்.எச்.எம். நபார், நீதிமன்ற உத்தியோகத்தர் எம்,ஐ. நிறோஸ் ஜே.பி, கட்சியின் நற்பிட்டிமுனை இளைஞர் அமைப்பாளர் ஐ.எம். றிபான் (Tr, JP), கட்சியின் நற்பிட்டிமுனை பிரதேச செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.

அதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பதினால் நற்பிட்டிமுனை பொதுச் சந்தையின் மேல் தளத்தில் கலாசார மண்டபம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட 20 இலட்சம் நிதியின் மூலம் விரைவில் நிர்மான வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவரது இணைப்புச் செயலாளர் ஏ.சி. சமால்தீன் தெரிவித்தார்.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال