JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் மாவட்ட மீனவ அமைப்புகளின் தலைவராக ஹியூமன் பெர்ணான்டோ தெரிவு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளம் மாவட்ட மீனவ அமைப்புகளின் புதிய  தலைவராக கற்பிட்டி ஆனைவாசலைச் சேர்ந்த ஹியூமன் பெர்ணான்டோ தெரிவு செய்யப்பட்டுள்ளார் 


புத்தளம் மாவட்டச் செயலகத்தில் புதன்கிழமை (27) நடைபெற்ற புத்தளம் மாவட்ட மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கிடையிலான ஒன்றுகூடலின் போதே இத் தலைவர் தெரிவு இடம்பெற்றது.


இதில் தேசிய மீன்வளச் சங்கத்தின் செயலாளர் அஜந்தா, புத்தளம் மீன்வள உதவிப் பணிப்பாளர் சரத் சந்திரநாயக்க, புத்தளம் மாவட்ட மீன்வள அமைச்சகத்தின் ஒருங்கிணைப்பாளர் சாகர வீரசேகர, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான் ஆகியோரும் புத்தளம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 71 மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.


இத் தலைவர் தெரிவிற்காக ஹியூமன் பெர்னாண்டோவும் தினேஷ் சுரங்கவும்  போட்டியிட்டனர். இதில் ஹியூமன் பெர்ணான்டோ 56 வாக்குகளையும் தினேஷ் சுரங்க 15 வாக்குகளையும் பெற்றனர் இதன் மூலம் மேலதிக 41 வாக்குகளால் வெற்றி பெற்ற ஹியூமன் பெர்ணான்டோ தலைவராகத் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது..








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال