கற்பிட்டியில் குர்பான் மாடு அறுப்பதற்கான அனுமதிப் பத்திரம் வழங்க 1000/- அறவிடும் கற்பிட்டி பிரதேச சபை
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி பிரதேச சபை எல்லைக்குள் ஹஜ் பெருநாள் குர்பான் கொடுப்பவர்கள் அதற்கான அனுமதிப் பத்திரம் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் ஊடாக சாகாதார பரிசோதகரின் பரிந்துரைக்கு ஏற்ப கற்பிட்டி பிரதேச சபையின் ஊடாக அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டு வருகின்றது இவ்வாறு வழங்கப்படும் ஒரு மாட்டிற்கான அனுமதிப்பத்திரத்திற்கு கற்பிட்டி பிரதேச சபை கடந்த காலங்களில் 200- 250/- ரூபாவை அறவிட்டது
அதாவது கற்பிட்டி பிரதேச சபை இவ் வேலைத்திட்டத்தில் எவ்விதமான வெளிக்கள செயற்பாடுகளிலும் ஈடுபடுவதில்லை சகல வெளிக்கள செயற்பாடுகளையும் கற்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயமே மேற்க் கொள்வதுடன் அனுமதிப்பத்திரம் வழங்கும் அலுவலக செயற்பாடுகளை மாத்திரம் கற்பிட்டி பிரதேச சபை மேற்க் கொண்டு வருகின்றது. இதற்கான சேவைக் கட்டணத்தை இவ்வருடம் 1000/- ருபாவாக அதிகரித்துள்ளது இதன் காரணமாக அதிர்ப்த்தி அடைந்த பொது மக்கள் இது விடயமாக கற்பிட்டி பிரதேச சபையிடம் வினவிய போது கற்பிட்டி பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் ஏகமனதாக தீர்மானத்தின் படியே மேற்படி அதிகரிப்பு இவ் வருடம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான மக்கள் நலனில் அக்கரை கொள்ளாது தான்தோன்றி தனமான கற்பிட்டி பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களின் செயற்பாடு தமக்கு கவலை அளிப்பதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments